உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொடுங்கோலாட்சியா?

தமிழ் அரசியல் கைதிகளை விடுக்கக் கோரி இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவகத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

arpaddam-jaffna-16112015

அகில இலங்கை மக்கள் முன்னணி மற்றும் மன்னார் மக்கள் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியூறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் அணைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் கைதிகள் சிறைக்குள் நடாத்தும் உண்ணாவிதரப் போராட்டம் நியாயமானதே அவர்களை உடன் விடுதலை செய், உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொடுங்கோலாட்சியா, சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா, சர்வதேசமே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

Related Posts