உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது.
இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்.
இதில், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள், லேசர் கீற்று வெசாக் அலங்காரப் பந்தலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இது ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.