உலகிலே அதிக தற்கொலை இடம்பெறும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில்!

தற்கொலை செய்துகொள்வோர் குறித்து உலக நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளில் காணப்படும் மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெறும் தற்கொலை வீதம் ஒரு இலட்சத்திற்கு 11 வீதமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இதன் வீதம் ஒரு இலட்சம்பேருக்கு 28.8 வீதமானவர்கள் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நூற்றுக்கு 50 வீதமானவர்கள் மதுபானத்துக்கும் போதைவஸ்துக்கும் அடிமையாகியுள்ளனர். இதன் காரணமாகவே இலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களின் வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது எனவும் ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Related Posts