“உலகத்தை வெல்லும் வழி!” வெளியானது மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம்(நேரடி ஒளியலை வரிசை)

இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

mahintha

இந்த விஞ்ஞாபனம் இன்று 23.12.2014 முற்பகல் 9 .30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் வெளியிடப்பட்டது.

“மஹிந்த சிந்தனை – உலகத்தை வெல்லும் வழி” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகும் நிலையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

அரசாங்க கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அஞ்சல் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கவுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுமிருந்தது.

ஏற்கனவே இந்த விஞ்ஞாபனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26ம் திகதியே வெளியிடப்படும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனம் கடந்த 19ம் திகதியன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Broadcast live streaming video on Ustream

Related Posts