உலகத்தின் முதலாவது ஆளுடன் கூடிய தானியங்கி சிறிய ரக விமானத்தினை(Drone) சீன நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
உளவு பார்க்கும் சிறிய ஆளில்லா விமானங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.மற்றும் Drone எனப்படும் கீழிருந்து கட்டுப்படுத்தப்படும் சிறிய ரக படமெடுக்கும் விமானங்களை பற்றிக்கேள்விப்பட்டிருக்கின்றோம் பார்த்திருக்கின்றோம் தற்போது Ehang என்ற சீன நிறுவனம் ஒன்று பயணி ஒருவரை காவிச்செல்லக்கூடிய தானியங்கி சிறியரக விமானத்தினை நேற்று (6) வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் Las Vegas கண்காட்சிக்கூடத்தில் இது பார்வைக்கு விடப்பட்டது.
EHANG 184 என்று பெயரிடப்பட்ட இந்த சிறிய ரக விமானத்தில் ஒருவர் ஏறி அமர்ந்து எங்கு போகவேண்டும் என்பதை தொடுகை மூலம் வரைபடத்தில் குறிப்பிட்டு பறக்குமாறு ஆணை வழங்கினால் அந்த இடத்தில் தரையிறக்கும்
ஆகக்கூடியது 100 கிலோகிராம் வரையில் சுமக்கக்கூடியது. மின்சார சக்தியில் பயணிக்கும் இதற்குரிய மின்சாரத்தினை 2 மணித்தியாலத்தில் மின்னேற்றம் செய்யலாம். 23 நிமிடங்களுக்கு பறக்கக்கூடியது.குளிருட்டி வசதி கொண்டது.
அதிகூடிய உயரம் 11 500 அடி வரை எழும்பும்.நிலமட்டத்திற்கு கீழ் 500 மீற்றர் வரை தாழ்வாக பறக்கும் அதனுடைய அதி கூடிய உயரத்தில் அதி கூடிய வேகம் மணித்தியாலத்திற்கு 63 மைல்கள் ஆகும்
முக்கிய பிரச்சனை என்ன என்றால் மேலெழுவதற்கும் தரையிறங்கும் ஆணை வழங்குவதை தவிர பயணி வேறு எந்த கட்டுப்பாடுகளையும் விமானத்தின் மீது கொண்டிருக்க முடியாது .
அதனுடைய விலை 200,000 $ -300,000 $ வரை வரலாம் (4.38 கோடி ரூபாய்) என நிறுவனம் கூறுகின்றது. எனினும் விற்பனைக்கு முன்பாக சட்டரீதியான கட்டுப்பாடுகளை அது எதிர் கொள்ள வேண்டி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறிய ரக பறக்கும் சாதனங்களுக்கான கட்டுப்பாடுகள் உலகநாடுகள் பலவற்றில் குறிப்பாக அமெரிக்காவில் இறுக்கமாகவே உள்ளன எனவே இது எல்லா இடமும் பாவனைக்கு வருவது கடினமானதே. ஆனால் திரைப்படங்களில் காட்டியதை மனிதன் நிஜத்திலும் சாதித்து விட்டான் என்பதே உண்மை. எதிர்காலத்தில் மனிதனின் முக்கிய போக்குவரத்து சாதனமாக இது அமையலாம்