உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை யாழ்.ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தமிழாராய்ச்சி உயிர்கொடை உத்தமர்கள் நினைவாலய நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நினைவு தூபிக்கு மாலை அணிவிaத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உலக தமிழராய்ச்சி மாநாட்டின் போதும் ஊர்வலத்தின்போதும் இப்பகுதியில் வைத்து 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்
யாழில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக இந்நினைவு தூபியானது வெள்ளநீரில் மூழ்கியது. இதற்கு மத்தியிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.