உலகக் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்!

உலகக் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நோர்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். எனினும் தமிழக வீரரான பிரக்ஞானந்தாவின் திறமைக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் உலகின் முதல் தர வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு சமநிலையில் (Draw) முடித்தார் பிரக்ஞானந்தா.

18 வயதான பிரக்ஞானந்தா கடந்த திங்கள் கிழமை Tie-breaker-இல் உலகின் மூன்றாம் நிலை வீரரான Fabiano Caruana வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நோர்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன், நிஜாத் அபாசோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலகக்கிண்ண சதுரங்க தொடர் அசர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்றது.

Related Posts