உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடுவானில் ரசித்துப் பார்த்த ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு அரிய வாய்ப்பை அவரது அதிகாரப்பூர்வ விமானமான ஏர்போர்ஸ் ஒன் ஏற்படுத்திக் கொடுத்தது.

அமெரிக்கா, ஜெர்மனி இடையிலான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை விமானத்தில் பறந்தபடி பார்த்து ரசித்துள்ளார் ஒபாமா. இந்த காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிடவும் செய்துள்ளது வெள்ளை மாளிகை.

obama-footbaal

மற்ற தலைவர்களுக்கு பெரும்பாலும் கிடைக்காத வாய்ப்பு இது. ஆனால் அமெரிக்கா என்ற காரணத்தால் ஒபாமாவுக்கு இது கிடைத்துள்ளது. அவரும் அமெரிக்காவின் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தார்.

அமெரிக்க அதிபர்களுக்கான பிரத்யேக விமானம்தான் இந்த ஏர்போர்ஸ் ஒன். இல்லாத வசதிகளே இல்லை இந்த விமானத்தில். அத்தனை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தகவல் தொடர்பு வசதிகள் என.. ஒரு குட்டி வெள்ளை மாளிகையாக இது செயல்படுகிறது.

மின்னபோலிஸ் நகருக்குச் செல்வதற்காக ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்தார் அதிபர் ஒபாமா. அப்போது அவருக்காக கான்பரன்ஸ் ஹாலில், அமெரிக்கா – ஜெர்மனி இடையிலான கால்பந்துப் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நேரடியாக ஒளிபரப்பான இந்தப் போட்டியை ரசித்துப் பார்த்தார் ஒபாமா. அவருடன் அவரது உதவியாளர்களும் ரசித்துப் பார்த்தனர். போட்டியைப் பார்க்கும்போது கொறித்துக் கொள்வதற்காக ஏகப்பட்ட சிப்ஸ், ஸ்னாக்ஸ்களும் அவர்களுக்காக அளிக்கப்பட்டது.

மின்னபோலிஸ் நகரில் விமானம் தரையிறங்கியபோது போட்டியும் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி, தாமஸ் முல்லர் போட்ட அபாரமான கோல் காரணமாக 1-0 என்ற கணக்கில் வென்றது.

ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா இப்போட்டியில் தோற்றாலும் கூட இன்னொரு போட்டியில் போர்ச்சுகல் அணி கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததால் 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts