உலகக்கிண்ண போட்டிகளுக்காக பங்களாதேஷ் பயணமாகினர் கிளிநொச்சி மாணவிகள்!

எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில், தெரிவான கிளிநொச்சி மாணவிகள் பங்களாதேஷ் பயணமாகினர்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த உலகக் கிண்ண ரோல் போல் போட்டியில் பங்குபற்றுபவராவார்கள்.

மேலும் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று, கடந்த வருட இறுதிப் பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட ரோல் போல் போட்டியில் தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு பெரியளவிலான வசதிகளோ, பிரத்தியேக உள்ளரங்கமோ இல்லாதநிலையில் தமது பயிற்சியை மேற்கொண்டு 56 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றவுள்ள உலக கிண்ண போட்டிவரை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts