உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி : ஆர்யா

இதுவரை சினிமா உலகில் சிக்ஸ் பேக்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பாலிவுட் சினிமாவில் சில நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்ததை அடுத்து தெலுங்கு, தமிழ் சினிமாக்களிலும் நடித்தனர்.

aryaaa

அந்த வகையில், சூர்யா, சிம்பு, விஷால், அதர்வா உள்பட சில நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்தனர். ஆனால் அது ஒரு சீசன் போலாகி விட்டது. இப்போதெல்லாம் அந்த மாதிரி யாரும் நடிக்கவில்லை. ஆனால் ஆர்யா, தான் தற்போது நடித்துள்ள கடம்பன் படத்தில் 8 பேக் வைத்து நடித்துள்ளார்.

இந்த சேதி வெளியானதை அடுத்து கோலிவுட் ஹீரோக்கள், சிக்ஸ்பேக் வைப்பதே கடினமான நிலையில் 8 பேக் எப்படி வைக்க முடியும் என்று ஆளாலுக்கு ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், கடம்பன் டீசரில் யானைகளுக்கு மத்தியில் ஆர்யா தனது ஜிம்பாடியை காண்பித்தபடி ஓடி வருவதைப்பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் கொடுத்து அவரை பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அதையடுத்து தன்னை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, டுவிட்டரில் முத்தங்களையும் பரிசளித்து வரும் ஆர்யா, இந்த பாராட்டுக்கு பின்னாடி என்னோட ஓராண்டு கடுமையான உழைப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Posts