உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார்.

Kurukula -rajha-education ministor

வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் இந்திரராசா தன்னை அச்சுறுத்தியதாக அவைத்தலைவர் மற்றும் அளுநருக்கு முறைப்படி அறிவித்தல் விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போதைய நடவடிக்கை எவை என்பது குறித்ததான கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றினை சபையில் முன்வைத்தார்.

அதற்குப் பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உறுப்பினர் இந்திரராசாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் விடயத்திற்கு முன்னதாகவே குறிப்பிட்ட அதிபருக்கு எதிராக பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அதனையடுத்து முன்னாள் ஆளுநருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டு கணக்காய்வாளர்கள் அனுப்பப்பட்டு மேற்பார்வை செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே கடந்த வாரம் எனது அமைச்சருக்கு கட்டளை இட்டுள்ளேன் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்து உரிய தீர்வினை பெறுமாறு.

எனவே அமைச்சின் ஊடாகவும் வலையத்தின் ஊடாகவும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றார்.

அதேவேளை , புதிய ஆளுநர் பளிகக்காரவுக்கும் விடயம் குறித்து தெரியப்படுத்துவதாக அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் சபையில் தெரிவித்தார். குறித்த அதிபர் தொடர்பிலான முறைகேடுகளை உறுப்பினர் இந்திரராசா வெளிக்கொணர முற்பட்ட வேளை குறித்த பாடசாலையின் அதிபர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 2014.11.02 அன்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தன்னை அச்சுறுத்தியதாக உறுப்பினர் முறைப்பாடு பதிவு செய்ததுடன் 3.11இல் அவைத்தலைவரிடமும் அறிவித்திருந்தார்.

எனினும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் நேற்று நடைபெற்ற மாகாண சபை அமர்வில் கவனயீர்ப்புப் பிரேரணையாக குறித்த விடயத்தைக் கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts