உறவுகளை நினைவுகூர தயாராகிறது முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் பிரதான நிகழ்வு, இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் திடலில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் தற்போது அங்கு வந்தவண்ணமுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts