உறவினர் ஏமாற்றியதால் தீயில் எரிந்து பெண் மரணம்

fire2தீயில் எரியுண்ட பெண்ணொருவர் நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை வடக்கு சென்.மேரிஸ் வீதியைச் சேர்ந்த தவராசா அன்னரனி அம்மா (வயது 36) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பெண்ணின் நகைகளை வங்கியொன்றில் அடகு வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு சென்றுள்ள உறவினர் இப் பெண்ணை ஏமாற்றியுள்ளார்.

இதனால் விரக்தியுற்ற பெண் சம்பவ தினமான கடந்த மாதம் 29 ஆம் திகதி இரவு 11 மணியளவில் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இருப்பினும் குறித்த பெண் தனது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தீயினை அணைத்து விட்டு கிணற்றிலிருந்து வெளியே வந்துள்ளார்.

எரியுண்ட தனது உடைகளை மாற்றிவிட்டு அயல் வீட்டாரிடம் நடந்தவற்றை விபரித்துள்ளார். அயலவரின் உதவியுடன் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வைத்தியசாலையில் தொடர்ந்து 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் நேற்று முன்தினம் பிற்பகல் 5.30 மணிக்கு இறந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் பிரதித் திடீர் மரணவிசாரணை அதிகாரி நவசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts