உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான சிறப்பு பொருட்கள் மீதான வரி ஆகஸ்ட் 23ம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் சிறப்பு பொருட்கள் மீதான வரி ஒரு கிலோவிற்கு 40 ரூபாவாலும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் சிறப்பு பொருட்கள் மீதான வரி ஒரு கிலோவிற்கு 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts