உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஜன் கஜேந்தினி (வயது 17) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரும்பிராய் சந்திக்கு அண்மையில், இவர்கள் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதாமாக சைக்கிள் பட்டாவுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.