உருமறைப்புச் சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவம்!

அண்மையில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் காங்கேசன்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டபோதும் அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றப்படாது அச்சோதனைச்சாவடியை மறைமுகமான ஓர் இடத்தில் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உருமறைப்புச் செய்யப்பட்ட சோதனைச்சாவடியில் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், அவ்வீதியால் பயணிக்கும் மக்களைக் கண்காணிப்பதுடன், அவ்வீதியால் பயணிக்கும் வாகனங்களின் இலக்கங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மீள் குடியேற்றத்திற்காக மக்கள் காங்கேசன்துறைப்பகுதிக்கு தமது காணிகளைப் பார்வையிடச் சென்றவேளை அங்கிருந்து அச்சோதனைச்சாவடி அகற்றப்பட்டிருந்ததுடன் அச்சோதனைச் சாவடியுடன் இருந்த இராணுவமுகாமும் அகற்றப்பட்டிருந்தது.

Related Posts