உருக்கு வீடுகள் தொடர்பில் இலங்கை நிபுணர் குழு எதிர்ப்பு: பல குறைபாடுகளும் சுட்டிக்காட்டு

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 65 ஆயிரம் உருக்கு வீடுகள் போதிய அத்திவாரங்களோ கூரை தொடர்பான ஆதரங்களோ இல்லாதவையாக காணப்படுவதாகவும், காற்றோட்ட வசதிகளும் இல்லாதிருப்பதாகவும் மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடுகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான ஆய்வை மேற்கொண்ட பின்னர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.

பேராசிரியர் பிரியன் டயஸ், டொக்டர் நக்கிகா கல்வத்துற மற்றும் கட்டடக்கலைஞர் வருண டீ.சில்வா ஆகியோரின் அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய வீடுகள் லக்ஸம்பேக்கை தளமாகக்கொண்ட ஆசிலோ மிட்டல் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ளன.

குறித்த வீடுகளை விஸ்தரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது எனவும் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சீமெந்து கற்களால் கட்டப்படும் வீடுகளிலும் பார்க்க இதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதால் உள்ளுர் பொருளாதாரத்திற்கு அனுகூலங்கள் கிடைக்காது எனவும் கூறப்படுகின்றது.

Related Posts