பருத்தித்துறை நீதி மன்றத்தில் உரிமை கோரப்படாத பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான துவிச்சக்கரவண்டிகள் மோட்டார் சைக்கிள்கள், கையடக்கதொலைபேசிகள், மின்சாரப் பொருட்கள், தராசுபடிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் அடங்குகின்றன.
எதிர் வரும் 27ஆம் திகதி இடம் பெறவுள்ளதுடன் ஏலம் ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பொதுமக்கள் ஏலவிற்பனை பெருட்களை பார்வையிடலாம்.
ஏல விற்பனையில் கலந்து கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையுடன் வருவதுடன் ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களுக்கு உடனடியாக பணம் செலுத்தி பொருட்களை எடுத்துச் செல்லவேண்டும்.
பொருட்களின் உரிமையாளர்கள் ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு முன்னர் உரிமைக்கோரிக் கையைச் சமர்ப்பிக்கவேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது.