உயிர் வேண்­டுமா? பைக் வேண்­டுமா? – வாள்வெட்டுக்குழு அட்­ட­கா­சம்!!

சண்­டி­லிப்­பா­யில் நேற்று இரவு வாள்­க­ளு­டன் நின்ற கும்­பல் ஒன்று பெரும் அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்­டது. வீதி­யில் போவோர் வரு­வோரை மடக்கி, மிரட்­டி­யது, முகத்தை மூடி துணி­கட்டி வாள்­க­ளு­டன் நின்­ற­வாறு இந்­தக் குழு அட்­ட­கா­சம் செய்­தது.

வீதி­யில் சென்ற வாக­னங்­களை இந்­தக் குழு அடித்து நொருக்­கி­யது. ஒரு­வ­ரு­டைய மோட்­டார் சைக்­கி­ளை­யும் பறித்­து­ச் சென்றது. ‘‘உயிர் வேண்­டுமா, பைக் வேண்­டுமா’’ கேட்டு வாளைக் காட்டி மிரட்­டி­யதை அடுத்து மோட்­டார் சைக்­கி­ளைக் கொடுத்­து­ விட்­டுத் தப்­பி­னார் ஒரு இளை­ஞர்.

சம்­ப­வம் நேற்று இரவு 9 மணி­ய­ள­வில் சண்­டி­லிப்­பாய் இரட்­டை­ய­பு­ரம் வைர­வர் கோவிலை அண்­டிய பகுதி, ஆலங்­கு­ளாய், கல்­வளை, சண்­டி­லிப்­பாய் வடக்கு போன்ற இடங்­க­ளில் இடம்­பெற்­றது. முகத்தை மூடித் துணி­யால் மறைத்­த­வாறு 8 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வந்த 10க்கும் மேற்­பட்­ட­வர்­களே இவ்­வாறு அடா­வ­டித்­த­னத்­தில் ஈடு­பட்­ட­னர்.

தையல் கடைக்­குள் நின்ற இளைஞனை மிரட்­டியே மோட்­டார் சைக்­கி­ளில் பறிக்­கப்­பட்­டது. வீதி­யால் சென்­ற­வர்­கள் வாள்­க­ளு­டன் நட­மா­டி­ய­வர்­க­ளைக் கண்டு, வாக­னங்ளை விட்­டு­விட்­டுச் சிதறி ஓடி­யுள்­ள­னர். அவர்­கள் தப்­பித்­தா­லும், வாக­னங்­கள் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கின. சிறிது நேரம் அங்கு தரித்து நின்ற வாள்­வெட்­டுக் கும்­பல் அங்­கி­ருந்து சென்­றது.

சம்­ப­வம் குறித்­துக் கேள்­விப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், உட­ன­டி­யாக அந்த இடத்­திற்கு விரைந்­தார். நில­மை­க­ளைக் கேட்­ட­றிந்­தார். பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் பொலி­ஸா­ருக்கு தக­வல்­களை வழங்­கி­னர். சம்­ப­வத்­தில் ஈடு­பட்­ட­வர்­களை உட­ன­டி­யா­கக் கைது செய்­வ­தாகப் பொலி­ஸார், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வன், மற்­றும் மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­த­னர்.

மேல­திக விசா­ர­ணை­க­ளும் சம்­பவ இடத்­தில் பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.

Related Posts