உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்களே காரணம் : முதலமைச்சர் சி.வி

“எனது உயிருக்கு, பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேலதிக பாதுகாப்பை அரசாங்கத்திடம் கோரவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன், இவற்றுக்கெல்லாம் சில ஊடகவியலாளர்கள் தவறாகவும் மற்றும் திரிவு படுத்தியும், செய்திகளை வெளியிட்டமையே காரணமாகும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரான நடேஷபிள்ளை வித்தியாதரனினால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகையின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய முதலமைச்சர், “ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நிமிடமும், உண்மையான மற்றும் சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குபவர்களாக இருத்தல் வேண்டும். அதேபோல, அந்தச் செய்திக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

வடமாகாணத்தில் பௌத்த மதம் மற்றும் புத்தர் சிலைகள் அகற்றப்படவேண்டுமென நான், கட்டளையிட்டதாக தென்னிலங்களை ஊடகவியலாளர்கள் அறிக்கையிட்டமையால், எனது உயிருக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. அதேபோல தென்னிலங்கையில் இருந்த மிகவும் மதிக்கத்தக்க என்னுடைய நபர்கள் பலரை இச்செய்தியினால் நான் இழக்கவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது”அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்கள் பல்வேறான வரபிரசாதங்களுக்கும், புகழ்ச்சிக்கும் அடிமையாகி, ஏனையவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதானது தார்மீகமான செயற்பாடுகள் அல்ல” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts