உயிர்போகும் வரை உக்ரைனியர்களை கொடுமைப்படுத்தும் ரஷ்யா: ஐ.நா அதிர்ச்சி தகவல்

ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார்.

எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷியா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் மேற்கொண்டு வந்த ஆய்வுகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்படும் பாதுகாப்பு மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்து இருக்கிறது.

இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷ்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷ்யா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் முன்னிலையாகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts