உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்த அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.
இந்நிகழ்வு மே – 18ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றலில் காலை 10.00 மணிக்கு இடம்பெறும் எனவும் பல்கலைக்கழக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யுத்த விதிகளை மீறி தனி ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டப்பட்ட மிகப் பெரிய மனிதப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுகள் இன்றும் காயாத குருதியாகி ஆறாத ரணங்களாக எம் நெஞ்சங்களில் புரையோடிக்கிடக்க மீண்டும் ஒரு முறை நினைவில் எழுகிறது.
இந்நாளில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளினதும் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் நீதிக்கான வேண்டுதலாகவும் உண்மையான உணர்வோடு அஞ்சலி செலுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.