உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி! அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ்

உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக, அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த, தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு தமிழ்மக்களின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன், உயிர்நீத்த தங்களுடைய உறவுகளை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். நினைவு கூர்வதற்கு அனுமதியளித்தமைக்காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.

இதேவேளை, இலங்கை ஒலி மற்றும் ஒளிப்பரப்பு கூட்டுத்தாபங்களின் சேவைகளில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன. தேசிய கீததத்தை தமிழ் மொழியிலும் இசைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts