பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது.
கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் தீப் பற்றிக் கொண்டிருந்த வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தத்தை கேட்ட நிமலசிறி, விரைந்து செயற்பட்டு, அந்த வீட்டுற்குள் குதித்து பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அப் பெண்ணை பத்திரமாக காப்பாற்றிய அவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைக் கேள்வியுற்ற பவுண்டேசன் சம்பந்தப்பட்ட இலங்கையருக்கு 30 மில்லியன் பணம் ($26,200) வழங்கி கௌரவித்துள்ளதோடு, இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டவர் இவர் எனவும் தெரிவித்துள்ளது.