உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய சூர்யா!

சூர்யா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தன் சிங்கம்-3 படப்பிடிப்பிறகாக ஆந்திராவில் பிஸியாகவுள்ளார் சூர்யா.

சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வந்த போது, ஒரு பெண் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடியுள்ளார். இதைக்கண்ட சூர்யா உடனே தாமதிக்காமல் அவரை தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

தற்போது அந்த பெண்ணிற்கு சிகிச்சை நடந்து வருகிறதாம். சரியான நேரத்தில் அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு சூர்யா கொண்டு வந்ததால் தான் அவரின் உயிர் காப்பற்றப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related Posts