உயர் வருமானவரி செலுத்துபவர்கள்; இறைவரி திணைக்களத்தினால் கௌரவிப்பு

யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதற்கான நிகழ்வுகள் யாழ். மாவட்ட பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துபவர்களில் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட வருமானம் கொண்டவர்கள் மற்றும் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் கொண்டவர்கள் என 21 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

high-tax-pay

இவர்களில் 7 பேர் தங்க அட்டைகளையும், 14 பேர் சில்வர் அட்டைகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெற்றுக் கொண்டவர்கள் இலங்கைக்குள் எங்கு சென்றாலும் முன்னுரிமை பெறுவார்கள் என யாழ். மாவட்ட ஆணையாளர் கணேசராசா தெரிவித்தார்.

Related Posts