உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவம் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை நிரூபணம்!

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை வரைபடங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

வலி.வடக்குப் பிரதேசத்தில் 700 ஏக்கர் நிலப்பரப்பு அண்மையில் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் வீமன்காமத்தில் இராணுவ முகாம் இருந்த நிலமும் அடக்கம்.

இந்தப் பகுதிக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான தலைமை முகாமாக செயற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த முகாமில் விவசாயச் செய்கை வரைபடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பகுதியில் முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் தேடப்படுகின்றன.

Related Posts