உயர்பாதுகாப்பு வலயத்தில் 5,710 ஏக்கர் இருக்கின்றன

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 710 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

‘வலிகாமம் வடக்கில் 5 ஆயிரத்து 500 ஏக்கர்களும் வலிகாமம் கிழக்கில் 210 ஏக்கர்களும் இவ்வாறு விடுவிக்கப்படவேண்டும். விடுவிக்கப்படாத காணிகளில் 38 முகாம்களையும் சேர்ந்த மக்களின் காணிகளும் உள்ளடங்குகின்றன.

முகாம் மக்களின் வாழ்க்கைக்கு 6 மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Posts