உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது

மேலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதாயின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமாகியதுடன் அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related Posts