இம்முறை உயர்தரப் பரீட்சையின் பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குளறுபடிகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வினாத்தாளை அதனை தயாரித்த குழுவினால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதில் எவ்வித குளறுபடிகளும் காணப்படவில்லை சம்பந்தப்பட்ட குழு தனக்கு அறிவித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறிப்பிட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்படுவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தம்மால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் நிலைப்பாட்டிற்கு அமைவாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்படும் இத்தகைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி