உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு இலக்கம் SC/FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு இலக்கம் SC/FR/254/2023 மனுதாரர்களினால் மீள பெறப்பட்டது.

அதன்படி, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை முன்னர் திட்டமிட்டபடி 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்தும் என அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts