2015 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, முடிவுகளில் திருப்தியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.