உயர்தரத்தில் சித்தியடைந்த 50, 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் ‘குரு பிரதிபா பிரபா’ விருது வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்- பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர் பீடங்களில் கற்காது உயர்தர தகமை மட்டுமே கொண்ட 50 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுகின்றவர்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் 4 வருட பயிற்சியளிக்கப்பட்டு கல்விப் பட்டதாரி பட்டமளிப்பு வழங்கப்படும்.
அத்துடன் கிராமிய பாடசாலைகளில் வெற்றிடங்கள் நிலவும் கணிதம்- ஆங்கிலம்- விஞ்ஞானம்- தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.