உயர்தரம்,புலமைப்பரிசில் பரீட்சையை திகதிகள் அறிவிப்பு

exam_deptஇந்த வருடம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்து 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் று.ஆ.என்.து.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts