கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டார்.
விடைத்தாள்களின் புள்ளிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக அவர் கூறினார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.