உயர்தரப் பரீட்சையில் வாழ்வக மாணவன் சாதனை.

vazvahamக.பொ.தா உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்விபயிலும் மாணவன் 3 பாடங்களிலும் ஏ தர சித்திபெற்று சாதனை படைத்துள்ளார்.

சொர்ணலிங்கம் தர்மதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் புரிந்தவராவார். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்ற இவர் தமிழ், இந்துநாகரிகம் மற்றும் அரசியல் ஆகிய 3 பாடங்களிலும் முதல்தர சித்தியைப் பெற்று மாவட்டத்தில் 4 ஆம் இடத்தையும் தேசிய ரீதியில் 54 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts