இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளில் பொருளியல் – 1 வினாத்தாள் தரமற்றதாகவும், பிழையாகவும் இருந்தது என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளருக்கு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜெயசிங்கவால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பல்தேர்வு வினாக்களின் 23,25,28,29 மற்றும் 38வது வினாக்கள் பிழையாகவும், முழுவினாத்தாளும் தரக்குறைவான முறையிலும் காணப்பட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.