கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுறேுகள் இம்மதம் 31ம் திகதிக்கு முன்னர் வௌியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இம்மாதம் 28ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதுடன் முதலாவது கட்டம் ஜனவரி 5ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இரண்டாவது கட்டம் ஜனவரி 16 முதல் 25ம் திகதி வரை 87 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது