உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று!!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் அதற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 42,883.ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts