கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்ற நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு, இந்த சலுகையால் அவற்றில் இருந்து விடுபட இயலாது எனவும் மேலும் கூறியுள்ளது.