உப தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்க போட்டி

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலுக்காக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இவர் கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதார்.

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி 13ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 24ம் திகதி ஆரம்பமானது.

மேலும் டிசம்பர் 4ம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts