உன் வயதைவிட சச்சினின் சதம் அதிகம்: மைக்கேல் கிளார்க்கின் மூக்கை உடைத்த சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கியவர் வீரேந்திர சேவாக். இவர் தனது பிறந்த நாளான கடந்த 20-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் சச்சினுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது கிளார்க் தொடர்புடைய ஒரு சம்பவத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் அணிக்கு புதிதாக வந்திருந்தார். அவர் சச்சின் தெண்டுல்கரிடம் சென்று, ‘உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்களால் சிறப்பாக பீல்டிங் செய்ய முடியாது. இதை செய்ய முடியாது, அதை செய்ய முடியாது’ என்று தொடர்ச்சியாக தெண்டுல்கரை கடுப்பேற்றிக்கொண்டிருந்தார்.

இதைக் கவனித்து கொண்டிருந்த சேவாக் பொறுமை இழந்து கிளார்க்கிடம் சென்று, அவரிடம் உன்னுடைய வயது என்ன? என்று கேட்க, அதற்கு கிளார்க் 23 வயது என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட சேவாக், சச்சின் உன்னுடைய வயதை விட அதிக சதம் அடித்துள்ளார் என்று கிளார்க்கின் மூக்கை உடைத்திருக்கிறார்.

Related Posts