அமிதிரிகல எலுவந்தெனிய பிரதேசத்தில் அதிக வேகத்தில் உந்துருளியை செலுத்திய இளைஞரொருவர் பேரூந்து ஒன்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிந்திருந்தார்.
நேற்று இடம்பெற்ற குறித்த விபத்து அவரது நண்பரால் அவ்விடத்தில் இருந்து கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல , இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த லஹிரு ஷெஹான் என்ற 19 வயது இளைஞராவார்.
எலுவந்தெனிய நடுவத்த பிரதேசத்தில் பிரதேசத்தில் நேற்றைய தினம் லஹிரு அதிக வேகத்தில் உந்துருளியை செலுத்திய போது பாடசாலை பேரூந்தொன்றில் மோதி உயிரிழந்தார்.
அவர் உந்துருளியை செலுத்துவதை அவரது நண்பரை கைப்பேசியில் பதிவு செய்யுமாறு கூறியதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.