2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையில், பொருளியல் வினாத்தாளில் லண்டன் உயர்தரப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் அப்படியே பிரதி செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டுக்கான பரீட்சை வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.