உ/த மீள் திருத்தத்துக்கான இறுதி திகதி அறிவிப்பு

வெளியான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பத்தாரிகள் தங்களுடைய விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியு. எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்தார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஊடாகவும் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

2016ஆம் ஆண்டுக்கான உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகள், ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு இன்றுக்காலை விநியோகிக்கப்பட்டது.

ஏனைய பாடசாலைகளுக்கான பெறுபேறுகள், தபாலிடப்பட்டுள்ளன. தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பெறுபேறுகள் தனிப்பட்ட விலாசத்துக்கு தபாலிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts