கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு அவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பொலிஸாரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
‘மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கும் தமது கல்விச் செயற்பாட்டை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் பிரசார கூட்டங்களிலும் ஆலயங்களின் திருவிழாக்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட நேர அளவில் ஒலிபெருக்கிப் பாவனையை பயன்படுத்த வேண்டும்.
தேர்தல் பிரசாரங்களுக்கான ஒலிபெருக்கிப் பாவனை, நேர அவகாசம் மற்றும் சத்தத்தின் அளவு என்பன பொலிஸாரால் அறிவுறுத்தப்படுகின்றன. இவற்றைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு’ அந்த துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.