உ/த பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை

Education-News2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 296,313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய பிரத்தியேக வகுப்புக்களை நடத்துதல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இன்று 30ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவிற்கு பின்னர் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பரீட்சை நிறைவடையும் வரை, பரீட்சை தொடர்பான செயலமர்வு, கலந்துரையாடல், கருத்தரங்குகளை நடாத்துதல் மற்றும் மாதிரி வினாப் பத்திரங்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றால் உடனடியாக அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ, பொலிஸ் தலைமையகத்துக்கோ, அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts