ஓகஸ்ட் 14 – 21 ஆம் திகதி வரை நடைறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் அத்தினங்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பொதுத் தேர்தலையொட்டியே பரீட்சை தினங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.