உ/த பரீட்சை இன்று ஆரம்பம்: 3 பொருட்களுக்குத் தடை

நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்ட, 2,230 பரீட்சை மத்திய நிலையங்களில், 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள், இன்று (08) ஆரம்பமாகின்றன என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த பரீட்சைகளில், 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர், இம்முறை தோற்றவுள்ளனர். அதில், 220 பேர் விசேட தேவையுடைவர்களுக்கான விண்ணப்பத்தாரிகளாவர் என்று, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றுவோர், ஸ்மாட் கைக்கடிகாரங்கள், அலைபேசி மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் ஆகிய மூன்று பொருட்களையும் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

பரீட்சை மோசடியில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டால், அரசினால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைகளிலும் பங்குபற்ற முடியாதளவுக்கு 5 வருடங்களுக்குத் தடைவிதிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்ப்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய கேள்வி பத்திரங்களை தயாரித்தல், அதனை விநியோதித்தல், கையேடுகளை விநியோகித்தல், பதாதைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பிரசாங்களை மேற்கொள்ளல் ஆகியனவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட கட்டளைகளை மீறுவோர் தொடர்பில், பரீட்சைகள் திணைக்கள அவசர இலக்கமான 1911 அல்லது 0112-784208 அல்லது 0112784537 என்ற பரீட்சைகள் திணைக்கள இலக்கங்களுக்கோ, பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119க்கோ அல்லது 011-2421111 என்ற பொலிஸ் தலைமையக இலக்கத்தை தொடர்பு கொண்டோ அறிவிக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts