உத்தம வில்லனின் வில்லன்களுக்கு மரியாதை செய்யும் கமல்

உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பழம்பெரும் வில்லன் நடிகர்களுக்கு மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kamal-uthamma-villan415

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மேலும் விழாவை சென்னை டிரேட் சென்டரில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இவ்விழாவில் பெங்களூரை சேர்ந்த ஒரு கலை குழுவினரின் ஆட்டக்களரி எனும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். உத்தம வில்லன் திரைப்படம் வரும் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரலில் ரிலீஸ் ஆக உள்ளது

படத்தில் ஹீரோவும் வில்லனும் கமல் என்பதால்தான் உத்தம வில்லன் என்று பெயரிட்டுள்ளனராம்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையுலகில் சாதனை படைத்த அனைத்து வில்லன் நடிகர்களையும் அழைத்து கவுரவப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நம்பியார் உள்ளிட்ட மாபெரும் மறைந்த வில்லன் நடிகர்களுக்கு பாடல் வெளியீட்டு விழாவில் மரியாதை செலுத்த உள்ளனராம்.

வில்லன்களுக்கு மரியாதை செய்யும் படக்குழுவினர் ஆரம்பகால வில்லன்களான ரஜினி, சத்யராஜ்க்கு அழைப்பு விடுப்பார்களாக என்பது தெரியவில்லை. அதுபற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

பாடல் வெளியீட்டு விழாவில் பெங்களூரை சேர்ந்த ஒரு கலை குழுவினரின் ஆட்டக்களரி எனும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். ‘உத்தம வில்லன்’ படத்தில் கேரளாவின் தைய்யம் கலை இடம் பெறுகிறது. இந்த கலையுடன் தொடர்புடைய கலை ஆட்டக்களரி என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்குசாமி-சுபாஷ் சந்திரபோஸின் திருப்பதி பிரதர்ஸ் உத்தமவில்லன் படத்தை தயாரித்து உள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை வாங்கி உலகம் முழுவதும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts